நிதியமைச்சர் பதவியில் இருந்து அருண்ஜெட்லியை நீக்க வேண்டும்!! யஸ்வந்த் சின்ஹா

பாட்னா:

அருண் ஜெட்லியை முதலில் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என யஸ்வந்த் சின்ஹா வலியுறுத்தி உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா மத்திய அரசின் மீது புதிய தாக்குதலை தொடுத்துள்ளார். வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக யஸ்வந்த் சின்ஹா இருந்தார்.

பிரதமர் மோடி அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்து இருந்தார். கருப்பு பணத்தை கணக்கில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தை ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை அடையவில்லை என்று கூறியிருந்தார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக பீகார் முன்னாள் சபாநாயகர் உதய் நாராயண் ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில் யஸ்வந்த் சின்ஹா கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி முறையை அமலுக்கு கொண்டுவந்த போது அதனை அருண்ஜெட்லி முழுமையாக நினைவில் ஏற்றிக்கொள்ளவில்லை. எனவே ஒவ்வொரு நாளும் டிங்கரிங் செய்து வருகிறார். பிரதமர் புதிய நிதியமைச்சரை கொண்டு வர வேண்டும். இதனை முழு பொறுப்புடன் நான் கூறுகின்றேன்’’ என்றார்.