டில்லி:

த்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு இன்று காலை சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோய் காரணமாக  சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த அருண்ஜெட்லி, கடந்த ஏப்ரல் மாதம் சிறுநீரக தொற்று நோய் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த சனிக்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு  இன்று காலை அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிரபல சிறுநீரக இயல்துறை சிறப்பு நிபுணரும், அப்பல்லோ மருத்துவமனை டாக்டருமான  டாக்டர் சந்தீப் குலேரியா மற்றும் அவருடைய சகோதரரான எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் டாக்டடர ரந்தீப் குலோரியா மற்றும் மருத்துவர்கள் குழு  இணைந்து அருண்ஜெட்லிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ மனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருண்ஜெட்லிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.