அருண்ஜெட்லியின் முதலாமாண்டு நினைவு – ஜிஎஸ்டி தொடர்பாக நிதியமைச்சகம் கூறுவது என்ன?

புதுடெல்லி: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, ஜிஎஸ்டி தொடர்பான பல அம்சங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது மத்திய நிதியமைச்சகம்.

அருண்ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமலாக்கப்பட்டது. அப்போது முதல், அந்த வரிதொடர்பான விமர்சனங்கள் இன்றும் இருந்து வருகின்றன.

இந்நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்தை இந்திய வரிவிதிப்பு துறையில் நிகழ்ந்த ஒரு மாபெரும புரட்சி என்று வர்ணித்துள்ளது நிதியமைச்சகம்.

மேலும் கூறப்பட்டுள்ளதாவது; முன்பு, ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வர்த்தக நடவடிக்கையின் ஆண்டு வருவாய் ரூ.20 லட்சம் என்றிருந்தது தற்போது ரூ.40 லட்சம் என்ற அளவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ரூ.1.5 கோடி அளவிற்கு வணிக டர்ன்-ஓவர்(கையாள்கை) மேற்கொள்வோர், ‍தொகுப்பு திட்டத்தை நாட முடியும் மற்றும் 1% வரி மட்டுமே செலுத்தலாம்.

தற்போதைய நிலையில், 28% வரி என்பது சொகுசு பொருட்கள் மற்றும் போதை சார்ந்த வஸ்துகளுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது. தொடக்கத்தில், மொத்தம் 230 பொருட்களுக்கு அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தப் பட்டியலிலிருந்து 200 பொருட்கள் வரை நீக்கப்பட்டுவிட்டன என்பது உள்ளிட்ட பல்வேறான தகவல்கள் நிதியமைச்சகம் சார்பில் பகிரப்பட்டுள்ளது.