கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில், அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அதைத் தொடர்ந்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய், நிவேதா பெத்துராஜ் வைத்து படம் இயக்குகிறார்.

‘நரகாசூரன்’ படத்துக்குப் பிறகு ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் கார்த்திக் நரேன். ஆனால், தற்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.