7 வருடக் காத்திருப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது : அருண் விஜய்

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக அருண் விஜய் கூறியிருப்பதாவது :-

இந்த நாள் நல்ல செய்தியுடன் விடிந்துள்ளது. ஆனால் இதற்காக 7 வருடக் காத்திருப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்காக வாதாட வேண்டாம் என வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் அம்மா, சகோதரி, மகள் இருக்கின்றனர். இந்த உலகைக் காப்பாற்ற ஆண்களை நன்றாக வளர்க்க வேண்டும்.