கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக வலைதளம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ‘பாக்ஸர்’ படத்துக்காக தீவிரமாக உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் அருண் விஜய்.
சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும்போது, தனக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான பதிவொன்றை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார் அருண் விஜய். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்துவிடுகிறார். சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
உடற்பயிற்சிக்கு முன்பாக உங்கள் இயந்திரங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இது விழுந்ததால் என்னுடைய இரண்டு முட்டிகளும் ஒரு வாரம் முழுக்க வீங்கியிருந்தன. பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல் எப்போதும் உடற்பயிற்சி செய்யாதீர்கள்” என கூறியுள்ளார் .