பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ திரைப்படத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் , நீல் நிதின் முகேஷ், லால், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் அருண் விஜய்யின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.