அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் ஜிந்தாபாத்’ …!

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘ஜிந்தாபாத்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடித்து வருகிறார்.

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.

ஆன் இன் ஆல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜ் மற்றும் எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.