அருணாச்சலில் பேருந்து கவிழ்ந்து 4 ராணுவ வீரர்கள் பலி

கவுகாத்தி:

அருணாசலப் பிரதேசம் திப்ரூகர் மாவட்டம் லிகாபாலியில் இந்தோ&திபெத் எல்லையில் பாதுகாப்பு படையினர் 20க்கு மேற்பட்டோர் பேருந்தில் சென்றனர்.

வளைவில் பேருந்து திரும்பிய போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த பலர் கயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 4 பேர் இறந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.