Random image

அருணாச்சல் மாநில வெள்ளம், நில சரிவுக்கு 5 பேர் பலி

கவுகாத்தி:

அருணாச்சல் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.

அருணாச்சல் மாநிலத்தில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மோடிரிஜோ, டோன்யி போலோ பகுதி, சந்திரா நகர், லோபி, ஜி.எஸ்.எஸ். போலீஸ் காலனி, பிரெஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 26 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. 60 வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கால்வாய்களும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் மோடிரிஜோ பகுதியில் 32 வயதான மேரி பியோங் என்ற பெண் பிணமாக மீட்கப்பட்டார். வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 10 வயது சிறுமி பங்பி பியோங் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மீட்பு குழுவினர் மேற்கொண்ட முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையும், உடல்நல பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.