முந்திரிக்கொட்டை  முதல்-அமைச்சர்

’’ நாடு தழுவிய ஊரடங்கு வரும் 15 ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்படும்’’ என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியிடம் இருந்தா?

இல்லை.

அருணாசலப்பிரதேச முதல் –அமைச்சர் பீம காண்டுவிடம் இருந்து.

தனது அலுவலக டிவிட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், காண்டு.

நேற்று மாநில முதல் –அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில், இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார், காண்டு.

இதனால் அரசியல் வட்டாரத்திலும், அலுவலக வட்டாரங்களிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

‘இது உண்மையா?’’ என ஆளாளுக்கு விசாரிக்க முற்பட்டனர்.

இந்திய ஊரடங்கு விவகாரத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இவருக்குக் கொடுத்தது யார்? என வினாக்கள் எழுந்தன.

தான் செய்த தவற்றை லேட்டாக உணர்ந்து கொண்ட, முதல்வர் காண்டு, அந்த டிவிட்டர் பதிவை அரை மணி நேரத்தில் நீக்கி விட்டார்.

பார்த்தவர்கள் மனதில் இருந்து எப்படி நீக்க முடியும்?

தான் செய்த தவற்றை அடுத்தவர் மீது போடுவது தானே அரசியல் வாதிகளுக்கு அழகு.

அதையே செய்தார், காண்டு.

‘’ இந்த விஷயமே எனக்குத் தெரியாது. எனது டிவிட்டரைக் கையாளும் உதவியாளர் தான் இப்படிச் செய்துள்ளார். அவருக்கு இந்தி ஞானம் கொஞ்சம் கம்மி’’ என்று சமாளித்துள்ளார், அருணாச்சல பிரதேச முதல்வர்.

 

–  ஏழுமலை வெங்கடேசன்