டில்லி:

த்திய அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லை  அருண்ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றி வந்தவர் அருண்ஜெட்லி. ஜிஎஸ்டி போன்ற முக்கிய முடிவுகளை அமல்படுத்தி வணிகர்களிடமும், மக்களிடமும் கட்டாய வரி வசூல் முறையை அமல்படுத்தியவர்.

இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஒராண்டாக தீவிர பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தார். அருண்ஜெட்லி பணியை மத்தியஅமைச்சர் பியூல் கோயல் வகித்து வந்தார்.

இந்த நிலையில், மீண்டும் பாஜகவே வெற்றி மோடி தலைமையில் புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க உள்ள நிலையில், தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அருண்ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், தான் 18 மாதங்களாக நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதால், அமைச்சர் பதவியில் திறம்பட பணியாற்ற முடியாது என்று தெரிவித்து உள்ளார்.