அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு:  இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் ஏற்கனவே விசாரண முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது,   ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 18 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு  வழங்குவதற்காக, கடந்த  2008 நவம்பர் 27ல் கூடிய  அமைச்சரவை முடிவுப்படி ஆணையிடப்பட்டு, 2009ம் ஆண்டில் தமிழ்நாடு அருந்ததியர் (தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 2009 ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த உள்இடஒதுக்கிட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டன. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. உச்சநீதிமன்ற  நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக  ஏற்கனவே பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.