மிஷ்கினுடன் ‘அஞ்சாதே 2 ‘ல் இணையும் அருண்விஜய்…!

--

 

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் மிஷ்கின். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம் எடுத்து வெற்றி காண்பதில் வல்லவர்.

மிஷ்கின் இயக்கிய படத்தில் இன்றைக்கும் அனைவரையும் ஈர்த்த படம் 2008 ல் வெளிவந்த அஞ்சாதே தான் .

இந்நிலையில் அஞ்சாதே 2 படத்தை இயக்க மிஷ்கின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் இந்தக் கதையில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் தன் கைவசம் உள்ள படங்களை நடித்து முடிக்க வேண்டிய நிலைமையில் இருப்பதால் அஞ்சாதே 2 கதையில் அருண் விஜய் ஹீரோவாக தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed