Random image

நிர்மலாதேவியின் ஜாமின் மனு: மீண்டும்  தள்ளுபடி செய்தது விருதுநகர் நீதிமன்றம்

விருதுநகர்:

நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை மீண்டும்  தள்ளுபடி செய்தது விருதுநகர் மாவட்ட நீதிமன்றம். ஏற்கனவே 6 முறை அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள  நிலையில், இன்று மீண்டும் தள்ளுபடி செய்தது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்க அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை விருதுநகர் மாவட்ட நீதிமன்ற இன்று மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர்  தனியார் கலை அறிவியல்  கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்கு பண ஆசைக்காட்டி,  தவறான  பாதைக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான மொபைல் போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி பலமுறை மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி,ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.  இதன் காரணமாக  நிர்மலாதேவியின் காவல் மேலும்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

You may have missed