Random image

அறுசுவை அரசர் நடராஜன் மரணம் அடைந்தார்

சென்னை

பிரபல சமையல் கலைஞர் அறுசுவை அரசர் நடராஜன் உடல் நலக் குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

புகழ் பெற்ற சமையல் கலைஞரான நடராஜன் சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வருகிறார்.    அவருக்கு அறுசுவை அரசர் என்னும் பட்டப் பெயர் உள்ளது.    அவரை அனைவரும் அந்தப் பட்டப் பெயருடன் இணைத்து அழைப்பது வழக்கமாகும்.

அவர் ஏரளமான சமையல் குறிப்பு புத்த்கங்களையும் வெளியிட்டுள்ளார்.    சைவ சமையல் என்றாலே நடராஜன் என புகழப்படும் இவருக்கு தற்போது 92 வயதாகிறது.  கடந்த ஒரு வாரமாக இவர் சளித்தொல்லையால் மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.  நேற்று அவர் மரணம் அடைந்தார்.

சுமார் 55 ஆண்டுகளாக சமையல் உலகில் முடி சூடா மன்னனாக திகழ்ந்த அவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.