எங்களது தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்”-ஏகாதசி ; சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு சர்ச்சை….!

சூரரைப் போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் 39-வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குநர் ஹரி இயக்குகிறார். ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம்.

இசையமைப்பாளர் டி.இமான் சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, சில நாட்கள் தான் ஆகிறது. அதற்கு இதன் தலைப்பு சர்ச்சையாகியுள்ளது. என்னவென்றால், பாடலாசிரியர் ஏகாதசி ‘அருவா’ என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். தருண்கோபி தயாரித்துள்ள இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு சர்ச்சை குறித்து ஏகாதசி, “எப்படி சூர்யா படத்துக்கு ‘அருவா’ என்று தலைப்பு வைத்தார்கள் என்பது ஆச்சரியமாகவுள்ளது. எங்களது தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.