சிவகார்த்திகேயனின் “வாழ்” பட படப்பிடிப்பு நிறைவு…!

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வாழ்’ .

இந்தப் படத்துக்கு, ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட் செய்துள்ளார்.

பிரதீப் குமார் இசையமைப்பில், குட்டி ரேவதி, அருண் பிரபு, பிரதீப் குமார் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 75 நாட்களாக நடைபெற்று வந்த ’வாழ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், சுமார் 100 லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.