அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கி அதிதி பாலன் நடிப்பில் 2017-ல் வெளியான படம் ‘அருவி’.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த திரைப்படம் இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் பெரும் விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், இப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாத்திமா சனா ஷேக் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இ.நிவாஸ் இயக்கத்தில் ஒரு காமெடி டிராமா கலந்த ஒரு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை Applause என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிக்க, Faith பிலிம்ஸ் சார்பாக விக்கி ரஜனி இணைந்து தயாரிக்கிறார்கள்.