ருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்த ‘அருவி’ படம் ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது. அதேவேளையில் இந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் பரவாறாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

அருவி படத்துக்கு திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் அருவி படம் எகிப்து படத்தின் காப்பி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எகிப்து படமான அஸ்மாவின் படத்தை காப்பியடித்தே, அருவி படம் தயாரிக்கப்பட்டு என்றும், இரு படத்தின் கதைக்களமும் ஒன்றே என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அருவி படத்தில் கதாநாயகி அதிதி எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நோயாளியாகவும், எச்ஐவி நோயாளிகள் படும் துன்பம் குறித்தும், அதன் காரணமாக அவர்களை சமுதாயம் எவ்வாறு நடத்துகிறது என்பது குறித்து தெளிவுபடுத்தியிருப்பார்.

அதுபோலவே, அஸ்மா படமும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை.  அதில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண் மரணத்தை தழுவ விரும்பாமல் வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதுபோலவே எய்ட்ஸ் நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களை நோயில் இருந்து மீட்க  முயற்சி செய்து வருவதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருவி படம் அஸ்மா படத்தில் இருந்துதான் கதை திருடப்பட்டுள்ளது உறுதியாவதாக சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அருவி திரைப்படம், காப்பியடித்த கதைக்கரு என்பதால், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

தேசிய விருது பெற வேண்டிய ஒரு படம் அயல்நாட்டு படத்தின் காப்பி என்பது தெரிய வந்ததால், தனது விருது கனவை தொலைத்துள்ளது.