கெஜ்ரிவால்ஆலோசனைகமலுக்குஉதவுமா?

--

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார். நடிகர் கமல் ஹாசனை சந்திக்க இருக்கிறார். அவருடன் கமல் அரசியல் ஆலோசனை செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இதை ஆம் ஆத்மி டில்லி பிரமுகர்கள் உறுதி செய்துள்ளனர். அவர்கள், “கமல்ஹாசனும் கெஜ்ரிவாலும் அரசியல் சம்பந்தமாக கலந்துரையாடுவார்கள். தமிழ்நாடு திறன்மேம்பாட்டு மையத்தையும் கேஜரிவால் பார்வையிட உள்ளார்” என்கிறார்கள் அவர்கள்.

கெஜ்ரிவாலின் அரசியல் ஆலோசனை கமலுக்கு உதவுமா? அவை தமிழகத்துக்குபயன் அளிக்குமா?

கடந்த பாராளுமன்ற த்தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்தார் அணவுலை எதிர்ப்புபிர முகர்சுப. உதயகுமார். “எளியமக்கள்கட்சி” என்று ஆம் ஆத்மி பெயரை மொழி பெயர்த்து மக்களை சந்தித்தார் உதயகுமார்.

அந்த நேரத்தில், “அணுவுலையை ஆம் ஆத்மி எதிர்ப்பதால் சேருகிறோம்!” என்றார் அவர். ஆனால் அணுவுலை எதிர்ப்புபற்றி ஆம் ஆத்மி எதுவும் கருத்து தெரி விக்கவில்லை.

“ஈழப்பிரச்சினைக்கு ஆம் ஆத்மி ஆதரவுதரும்!” என்றும் கூறினார் உதயகுமார். அதுகுறித்தும் ஆம் ஆத்மி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அதேநேரம், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரின் தூக்கை அப்போதைய (ஜெயலலிதா தலைமையிலான) தமிழக அரசு ரத்துசெய்த போது உடனடியாக ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் எதிர்த்தார்.

“ முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது சரியல்ல. இது, மற்ற வழக்குகளுக்கு, எதிர்காலத்தில், தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்” என்றார்கெஜ்ரிவால்.

“கெஜ்ரிவால் அப்படி ச்சொல்லவேஇல்லை. செய்தி நிறுவனம் ஒன்று அப்படி தவறாக வெளியிட்டுவிட்டது” என்று தமிழகத்தில் உள்ள கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கூறினார்கள்.

ஆனால் பிறகு உதயகுமாரே, “கெஜ்ரிவால் அப்படி ச்சொன்னது உண்மைதான். அவரிடம் கேட்டேன் .தான்கவனக் குறைவாக சொல்லிவிட்ட தாகஎன்னிடம் சொன்னார். அந்தக்கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கெஜ்ரிவாலிடம் கோரிக்கைவைத்தேன்” என்றார்.

ஆனால் இதை ஏற்றோமறுத்தோ கெஜ்ரிவால் ஏதும் சொல்லவில்லை.

அணுவுலை, ராஜீ்வ் கொலை வழக்கு கைதிகள்… ஆகியோரது விசயங்களில் கெஜ்ரிவால்க ருத்து என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். அது அவரது உரிமை.

ஆனால் அவரது கட்சியின் தமிழகத்தலை வரின்கருத்தை கெஜ்ரிவால் பொருட்படுத்தவில்லை என்பதுஇதன்மூலம் உறுதியாகிறது.

அதுமட்டுமல்ல..

கடந்த பாராளுமன்ற த்தேர்தலில்ன்போது, “தமிழகத்தில் சிலரை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் களைநிறுத்த வேண்டாம்!” என்று தலைமையை வேண்டியிருக்கிறோம்” என்றார் ஆம் ஆத்மி கட்சியின் அப்போதைய பொறுப்பாளர் உதயகுமார்.

அதையும் கெஜ்ரிவால் பொருட்படுத்தவில்லை.

பிறகுடில்லிதலைமை (கெஜ்ரிவாலின்) முடிவுகளைத்தான் உதயகுமார் ஏற்றநடக்க வேண்டியிருந்தது.

மேலும், “தமிழகத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி என்பது, “எளிய மக்கள் கட்சி” என்றே அழைக்கப்படும்!” என்றார் உதயகுமார். ஆனால் இவர் மட்டுமே அப்படிச்சொல்லிவந்தார். இப்போது அதற்கும்டில்லி தலைமை தடைபோட்டுவிட்டது. இதையடுத்து “ஆம்ஆத்மி” தொப்பி போட்டுக்கொண்டு ஓட்டு க்கேட்க ஆரம்பித்தார்உதயகுமார்!

ஆக, “மாநில தலைமையின் மற்றும்மாநில கட்சிக்காரர்களின் உணர் வுகளைடில்லி தலைமைமதிப்பதில்லை” என்று பிறதேசிய கட்சிகளின் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டுக்கு ஆளானது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.

பின்னாட்களில் அக்கட்சியில் இருந்துவிலகிய உதயகுமார் இதேகருத்தை வெளிப்படையாக அறிவித்தார்.

அப்போதுஅவர், “தமிகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு வாய்ப்பில்லை.அந்தக்கட் சியிலும்மற்ற தேசியகட்சிகளைப்போல ஒரேகட்சி, ஒரே தலைமை, ஒரே சின்னம் என்ற மையப்படுத்துதல் இருக்கிறது. கட்சியின் அரசியல் விவகாரக்குழுவில் இந்திபேசக்கூடிய பேருக்குமட்டு மேபிரதிநிதித்துவம் இருந்தது. தமிழகத்தில் ஆம் ஆத்மி என்ற பெயருக்குப்பதில் சாமானியர் கட்சி என்று வைத்துக்கொள்ளலாம் என்ற யோசனையை க்கூட ஏற்கமறுத்தார்கள். தமிழகநிலை மையை அறியாதவர்களாகவும், அறிய விரும்பாதவர்களாகவும் அவர்கள் இருந்ததால் தான் நாங்கள் விலகினோம்” என்றார்.

“கமல் இதையெல் லாம்கவனத்தில் கொள்வதுநல்லது. கெஜ்ரிவாலுக்கு முன்பாகசுப. உதயகுமாரிடம் கமல் ஆலோசனை பெறவேண்டும்” என்று அரசியல் வட்டாரத்தில் ஒருகருத்து உலவுகிறது.