பட்டதாரிகளை பக்கோடா விற்க சொல்லும் பாஜக கனவு : அர்விந்த் கெஜ்ரிவால்

டில்லி

டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்கச் செய்வதே பாஜகவின் கனவு என குற்றம் சாட்டி உள்ளார்

தொலைக்காட்சி நிகழ்வு ஒன்ரில் பக்கோடா விற்பதும் ஒருவகையான வேலை வாய்ப்பு என மோடி கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.    நாடெங்கும் பல இடங்களில் இளைஞர்கள் பட்டமளிப்பு உடையுடன் பக்கோடா தயாரித்து விற்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.    மாநிலங்களவையில் அமித்ஷா பக்கோடா விற்பது இந்த தேசத்தில் அவமான செயல் இல்லை எனக் கூறினார்.

நேற்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பதிவு இட்டுள்ளார்.  அதில் “ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு சிறப்பான கல்வியை அளித்து அதன் மூலம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உருவாக்குவதை கனவாக கொண்டுள்ளது.   ஆனால் மக்கள் படித்திருந்தாலும் எழுத்தறிவில்லதாவர்களாக வைக்கவும் அவர்களை பக்கோடா விற்கச் செய்வதையும் பாஜக கனவாக கொண்டுள்ளது”  எனக் கூறி உள்ளார்.