ஆம் ஆத்மியையும் நீதித்துறையையும் கொடுமைப் படுத்தும் மோடி : கெஜ்ரிவால்

டில்லி

ம் ஆத்மி கட்சியைப் போலவே நீதித்துறையையும் மோடி கொடுமைப்படுத்துவதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல முறை மோடி அரசு பற்றி குற்றம் கூறி உள்ளார்.  ஏற்கனவே அவர் ஆம் ஆத்மி கட்சிக்கும் டில்லி அரசுக்கும் மத்தியில் ஆளும் மோடி அரசு பல விதங்களிலும் தடங்கல்கள் உண்டாக்குவதாக கூறி உள்ளார்.  சமீபத்தில் உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த ஜோசப்புக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பதவி வழங்க மத்திய அரசு மறுத்தது குறித்து சமீபத்தில் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த மூன்றாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால். “உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஜோசப் என்பவரை உச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிபதியாக பரிந்துரைத்துள்ளது.   ஆனால் மோடி இந்த சிபாரிசை நிராகரிப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கும் டில்லி அரசுக்கும் புரிவது போல நீதித்துறைக்கும் கொடுமைகள் புரிந்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.