பெங்களூரு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொண்டையில் அறுவைச் சிகிச்சை!

1kejriwa1l-atmaடில்லி:
பல ஆண்டுகளாக கடுமையான இருமலால் அவதிப்பட்டுவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த செவ்வாயன்று பெங்களூரு பொம்மசந்திராவில் உள்ள நாராயண ஹெல்த் சிட்டியில் தொண்டையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
பல ஆண்டுகளாக தீராத இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டுவரும் கெஜ்ரிவால் ஏற்கனவே செய்துகொண்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தொண்டையில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
பெங்களூரு பொம்மசந்திராவில் உள்ள நாராயண ஹெல்த் சிட்டியில் மூத்த மருத்துவரான டாக்டர் பால்.சி.சாலின்ஸ் மேற்பார்வையின்கீழ் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது
அறுவைச்சிகிச்சை முடிந்துள்ள நிலையில் ஓரிரு நாட்கள் எதுவும் பேசாமல் ஓய்வி எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.