டெல்லி: டெல்லியில் கொரோனா பரிசோதனைக்கான எண்ணிக்கை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றுகளை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.  டெல்லியில் 14 லட்சத்து 7 ஆயிரத்து 743 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.  11 ஆயிரத்து 998 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 330 ஆக பதிவாகி இருக்கிறது.  ஆனால் சில நாட்களாக தொற்றுகள் அதிகரித்து வருவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் கொரோனாவில் இருந்து குணம் பெற்றோர் விகிதம் 90 சதவீதம் ஆக இருக்கிறது. அதனை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்கிறோம்.

அடுத்து வரக்கூடிய நாட்களில் கொரோனா பரிசோதனைககளை  இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 17 முதல், தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1200 முதல் 1400 வரை அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமையன்று 1,544 க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுகள் இருந்தன. இன்றைய அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை 1,693 புதிய வழக்குகள் காண்பிக்கப்படும்.

அறிகுறிகளைக் கொண்டவர்கள், பரிசோதனை செய்யப்படாதவர்கள் அதிக கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கின்றனர். கொரோனா அறிகுறிகள் இருந்தால் சோதனை அவசியம் என்றார்.