புது டெல்லி:

டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மே 31 ஆம் தேதி வரை நீடிக்கும் லாக் டவுன் 4.0 க்கான வழிகாட்டுதல்களை வகுத்து, டெல்லி பொருளாதாரத்தை படிப்படியாக மீண்டும் திறப்பதற்கான தனது அரசாங்கத்தின் வரைபடத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மெட்ரோ சேவைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. இருப்பினும், வண்டிகள் மற்றும் பேருந்துகள் ஓட்டுனரைத் தவிர இரண்டு பயணிகளுடனும், முறையே இருபது பயணிகளுடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சந்தைகள் மீண்டும் திறக்கப்படும், ஆனால் கடைகள் ஒற்றைப்பட அடிப்படையில் செயல்பட முடியும்.

ஊரடங்கு 4.0 குறித்து டெல்லி முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஏ முதல் எல் வரை தொடங்கும் தொழில்துறை நிறுவனங்கள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மற்ற நிறுவனங்கள் எம் முதல் இசட் வரை காலை 8.30 மணி முதல் 6.30 மணி வரையும் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.