நாயகி இல்லாமல் உருவாகிவரும் ‘புலனாய்வு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…!

இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘புலனாய்வு’ . இதில் அரவிந்த் சுவாமி நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அரவிந்த் சுவாமி பிறந்த நாளை முன்னிட்டு, சன்தோஷ் பி.ஜெயக்குமார் ‘புலனாய்வு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இமான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகி யாருமில்லாமல் முழுக்க முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார்.