அரவிந்தசாமிக்கு ஜோடியாக 5 ஹீரோயின்கள்!

--

சென்னை:

5 ஹீரோயின்களை வைத்து நான் அவனில்லை படத்தின் ரீமேக்கையும், அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியவர் செல்வா. அவர் தற்போது அரவிந்த்சாமி, ரித்விகா சிங் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார்.    

இந்தப் படத்திலும் அரவிந்த்சாமி நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டரில்தான் நடிக்கிறாராம். தன் அழகை காட்டி பெண்களை விதவிதமாக ஏமாற்றுவாராம். ரித்திகாசிங்குடன் நந்திதா, சாந்தினி, ஹாசினி ஆகியோரும் நடிக்கிறார்கள். அரவிந்த்சாமியை துரத்தும் போலீஸ் அதிகாரியாக சிம்ரன் நடிக்கிறார்.

இவர்கள் தவிர ஹரிஷ் உத்தமன், ராஜ்கபூர், நாகிநீடு, ரமேஷ்பண்டிட், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பு வணங்காமுடி என்று கூறப்படுவதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை விரைவில் அதனை அறிவிப்போம் என்கிறார்கள்.