‘ஆர்யா 30 ‘ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு……!

ஆர்யா 30 படத்தை காலா,கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் துஷாரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படம் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

கலையரசன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பர்ஸ்ட்லுக் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.