லாக்டவுனில் நண்பர்களுடன் சைக்கிளில் பயணிக்கும் ஆர்யா…!

2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்யா.

தற்போது இவர் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. இந்தப்படம் ஜூன் மாதம் திரையில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் தாக்கத்தினால் இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது என வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில் சைக்கிள் பிரியரான ஆர்யா சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். இவருடன் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மற்றும் நடிகர் கலையரசன் உள்ளனர்.