பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா…!

பா.இரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது.

பாக்ஸிங்கை மையப்படுத்தி தயார் செய்த இந்த படத்தில் நடிப்பதற்கு ஆர்யா சம்மதம் தெரிவித்துள்ளார் . பா.ரஞ்சித், ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் 3 பேரை வைத்து இந்த பாக்சிங் கதையை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தன் புதிய படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் பா.இரஞ்சித்.

‘குரங்கு பொம்மை’ படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் புதிய கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.