ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஷால். இதனைத் தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலமாகத் தயாரிக்கவும் உள்ளார்.

இதில் நாயகியாக ரீத்து வர்மாவும், வில்லனாக ஆர்யாவும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.