இணையத்தில் வைரலாகும் ஆர்யாவின் புதிய ஃபிட்னெஸ் லுக்….!

‘பிர்சா முண்டா’ படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித்.

பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் ஆர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

பாக்ஸிங் வீரராக நடிப்பதற்கு ஆர்யா முழுமையாக தன் உடலமைப்பை மாற்றியமைத்தார். இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பு மாற்றத்தை, புகைப்படமாக தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. இந்த லுக் ட்விட்டர் தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முதன்முறையாக இன்று (பிப்ரவரி 20) மாலை 5 மணிக்கு, பா.இரஞ்சித் – ஆர்யா படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.