‘ரௌடி பேபி’ பாடலுக்கு நடனமாடும் ஆர்யா – சாயிஷா…!

நேற்று (மார்ச் 10) ஆர்யா சாயீஷா திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் இருவரும் முறைப்படி அறிவித்தனர். அதன்படி நேற்று இருவரும் பெற்றவர்கள் ஆசீர்வாதத்துடன் இணைந்தனர்

இந்த திருமணத்தில் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஆர்யா சாயீஷா இருவரும் கல்யாண கோலத்தில் ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.