இயக்குனர் பா. ரஞ்சித்துடன் ஆர்யா 30 படத்திற்கு இணைந்தார் ஆர்யா. கபாலி, காலா படத்திற்குப் பிறகு ஆர்யாவை வைத்து படம் இயக்கி வந்தார் ரஞ்சித்.

இப்படம், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

சார்பட்டா பரம்பரை என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாக்ஸிங் ரிங்கில் நிற்கிறார் ஆர்யா. கபிலன் என்ற பாத்திரத்தில் ஆர்யா நடித்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போஸ்டரில் ரோசமான ஆங்கில குத்து சண்டை என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். படத்தில் வடசென்னை பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. நடிகர் கலையரசன், ஜான் கொக்கென், ஷபீர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா படத்தொகுப்பு செய்கிறார். ராமலிங்கம் கலை பணிகள் மேற்கொள்கிறார். அன்பறிவு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் பிரத்தியேக புகைப்படங்களை பகிர்ந்தார் நடிகர் ஆர்யா. ஆர்யாவுடன் பசுபதி நிற்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ஆர்யவின் திருமண காட்சியின் போது எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பரிசளிக்கிறார் கலையரசன். இந்த புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.