பா.இரஞ்சித் படத்துக்காக 7 மாதங்களில் ஆர்யா அடைந்துள்ள மாற்றம்….!

‘பிர்சா முண்டா’ படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித். இப்படத்துக்கு ‘சல்பேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் ஆர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

பாக்ஸிங் வீரராக நடிப்பதற்கு ஆர்யா முழுமையாக தன் உடலமைப்பை மாற்றியமைத்தார். இதற்காக மிகவும் மெனக்கிடலில் ஈடுபட்டு தனது உடலமைப்பை மாற்றியுள்ளார்

இதனிடையே, 7 மாதங்களுக்கு முன்பு எப்படியிருந்தேன் இப்போது எப்படியிருக்கிறேன் என்பதை ஆர்யா தனது ட்விட்டர் தளத்தில் புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பா.இரஞ்சித் படத்துடன், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை 3’ படத்திலும் ஆர்யா கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.