வடபழனி பணிமனையில் விபத்தில் இருவர் பலி : ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை

டபழனி பணிமனையில் நடந்த விபத்தில் இருவர் மரணம் அடைந்ததையொட்டி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நகரின் வடபழனி பணிமனையில் அரசு மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நள்ளிரவு அங்கிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி உள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 5 ஊழியர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படனர்.

இவர்களில் இரு ஊழியர்கள் வழியில் மரணம் அடைந்தனர். மீதமுள்ள மூவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கு காரணம் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாமை என போக்குவரத்து ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சர்யான பராமரிப்புக் கோரியும் மரணம் அடைந்த ஊழியர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கோரியும்  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் இயன்க்காமல் உள்ளது. மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊழியர்களின் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2 died, bus accident :, Vadapalani depot, workers on strike
-=-