டில்லி

தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துக் கொண்டுள்ள 300 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி யின் புகாரை ஒட்டி நோட்டிஸ் அளித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் பங்குகள் விற்க மற்றும் வாங்க உதவ பல தரகர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உடனுக்குடன் பரிவர்த்தனை என்னும் பெயரில் பங்குகளை வாங்க மற்றும் விற்க ஒப்பந்தங்கள் செய்வது வழக்கமாகும். இந்த ஒப்பண்டன்க்கள் 11 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்பது பங்குச் சந்தை விதிமுறைகள் ஆகும். அதற்கு மேலும் அவற்றை நீட்டிப்பது சட்டப்படி குற்றமாகும்.

இது போல உடனடி ஒப்பந்தங்களை 11 நாட்களுக்கும் மேலாக நீட்டித்து அதன் மூலம் சந்தையில் ஒரு போலி பரபரப்பை ஏற்படுத்தியதாக பங்குச் சந்தை தரகர்கள் மீது பங்குகள் கட்டுப்பாடு நிறுவனமான செபி புகார் அளித்தது. அதை இந்திய பொருளாதாரக் குற்றங்கள் பிரிவு விசாரித்த்து.

அந்தப் புகாரில் காணப்பட்டவை உண்மை என்பதால் இவ்வாறு நடந்துக் கொண்ட 300 பங்குச் சந்தை தரகர்களுக்கு விளக்கம் கோரி நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த நோட்டிஸ் விலக்கிக் கொள்ளப்படும் வரை அவர்கள் பங்கு வர்த்தக சந்தையில் ஈடுபட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அளிக்கும் விளக்கத்தை செபி ஒப்புக் கொள்ளாவிடில் அவர்கள் பங்குச் சந்தையில் எப்போதும் ஈடுபட முடியாது எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து பங்குச் சந்தை பிரமுகர் ஒருவர், “நூற்றுக் கணக்கான இடைத் தரகர்களின் உரிமத்தை ரத்து செய்தால் பங்குச் சந்தை கடுமையாக முடங்கிப் போகக் கூடும். வேறு ஏதோ ஒரு குற்றம் நடந்துள்ளதால் அதை திசை திருப்ப தரகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பலரும் நினைக்கின்றனர். இது இந்திய பொருளாதாரத்துக்கு மேலும் பின்னடைவை உண்டாக்கலாம்.

செபி ஒரே நேரத்தில் 300 தரகர்களின் உரிமங்கலை ரத்து செய்தால் அது முதலீட்டாளர்கள் இடையே ஒரு அச்சத்தை உண்டாக்கும். இதனால் பங்கு வர்த்தகம் முழுமையாக முடங்கிப் போவதுடன் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அஞ்சும் நிலை உண்டாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டே ஓடி விடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இன்றைய பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் மூலம் இதன் தாக்கத்தை உணர முடியும் என கூறப்படுகிறது.