கேனக்கல்

ர்நாடகாவில் இருந்து காவிரி உபரி நீர் 78000 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி  ஆற்றில் கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் ஏற்கனவே முழுவதும் நிரம்பி உள்ளன.  தற்போது இரு தினங்களாகக் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ண ராஜ சாக்ர் அணையில் இருந்து விநாடிக்கு 43000 கன அடி மற்றும் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35000 கன அடி நீர் என மொத்தம் 78000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இந்த நீர் தமிழகம்  நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது.   மாநில எல்லையான பிலி குண்டுவில் கடந்த 2 நாட்களாக 13000 கன அடியாக இருந்த நீர் வரத்து 40000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அளித்த உத்தரவின்படி கரையோர் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மூலம் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  இதைப் போல் சேலம் மாவட்டத்தில் மேட்டூரை அடுத்த பண்ணவாடி பரிசல் துறை, உள்ளிட்ட காவிரிக் கரையோர மக்களுக்கும் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.