ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை – ராகுல்காந்தி

கன்னயாகுமரி:
ரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இன்று காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.

அங்கு அவரை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய்தத், தமிழக முன்னாள் தலைவர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், எம்எல்ஏ-க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜேஸ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாநில பொதுச் செயலாளர் விஜய் வசந்த், மாநில துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் கன்னியாகுமரி ஆர்.சி.சாலை சந்திப்பில் பொதுமக்களிடையே பேசிய ராகுல் காந்தி, தமிழ் கலாச்சாரத்தை அடிமைப்படுத்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பிரதமர் மோடிக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாசாரத்தை காக்க வேண்டியது என் கடமை என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஏழுசாட்டுப்பத்து கார்மல் மாதா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.