கொரோனா: நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு மாடிகளுக்கு சீல்

டில்லி

கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு மாடிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தலைநகர் டில்லியில் இந்த் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் டில்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இங்கு 16,281 பேர் பாதிக்கப்பட்டு 316 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நாடாளுமன்ற அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

அவர் நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் மாடிகளில் பணி புரிந்து வந்துள்ளார்.

இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள இரண்டு மற்றும் மூன்றாம் மாடிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மூலம் முழுமையாகச் சுத்தம் செய்யும் வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.