அண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாது : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை

ண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாததால் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து கடும் சர்ச்சை நிலவி வருகிறது  இந்த பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய மனித வளத்துறைக்கு எழுதிய கடிதத்தில் சிறப்பு அந்தஸ்து கோரி இருந்தார். மேலும் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தால் போதிய நிதி திரட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது  தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என தெரிவித்தார்.   இது குறித்து ஆலோசிக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது அதில் அமைச்சர்கள், அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சண்முகம் ஆகியோர் இடம் பெற்றனர்.

தமிழக அரசு இது குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கூறியது போல் அந்த பல்கலைக்கழகத்தால் போதிய நிதி திரட்ட முடியாத நிலை உள்ளது.   எனவே அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை.  தற்போதைய நிலையிலேயே பல்கலைக்கழகத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.