பா.ஜ.க. வலை வீசும் நிலையில், கிரிக்கெட் விளையாடும் எம்.எல்.ஏ.க்கள்..

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வரும் 19ம் ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

பா.ஜ.க.வால் இந்த தேர்தலில் ஒரு எம்..பி. இடத்தை கைப்பற்ற முடியும். ஆனால் இரண்டு வேட்பாளர்களை அந்த கட்சி நிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயல்வதாகவும், இதற்காக அந்த கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பா.ஜ.க.வலையில் சிக்காமல் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ( சுமார் 10 பேர்)ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொழுது போவதற்காக அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு  நேற்று ‘காந்தி’ திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

அதனை அவர்கள் வெகுவாக ரசித்து பார்த்தனர்.

மாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இன்னொரு அணியாகவும் பிரிந்து  கிரிக்கெட் விளையாடி நேரத்தை போக்கினர்.

 –பா.பாரதி