சிபிஐ விசாரணையுடன் ஒத்துப்போகும் எய்ம்ஸ் கண்டுபிடிப்பு : சுஷாந்த் வழக்கு முடிவுக்கு வருமா?

டில்லி

டிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணையும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டுபிடிப்பும் ஒத்துப் போவதாகக் கூறப்படுகிறது.

ரியாவுடன் சுஷாந்த் சிங்

பாலிவுட் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை ஒட்டி திரையுலகம் பரபரப்பில் ஆழ்ந்தது.   சுஷாந்த் சிங்கின் தந்தை தனது மகனின் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்ரவர்த்தி காரணம்  எனவும் அவருக்கு ஏராளமான பணம் சுஷாந்த் செலவழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.   இந்நிலையில் ரியாவின் கைதுக்கு பிறகு பாலிவுட்டில் நிலவி வரும் போதைப் பொருள் பழக்கம் குறித்தும் பல செய்திகள் வெளியாகி மற்றொரு வழக்கு தனியே நடந்து வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை சமீபத்தில் அளித்த அறிக்கையில் சுஷாந்த் சிங் மரணம் ஒரு தற்கொலை என திட்டவடடமாகத் தெரிவித்துள்ளது.  இது சிபிஐ விசாரணையுடன்  மிகவும் ஒத்துப் போகிறது.  ஏற்கனவே சிபிஐ சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கைப் பரிசீலனை செய்ததில் அவரை தனது பொருளாதார லாபத்துக்காக அவர் காதலி ரியா தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்பட்டது தவறு எனவும் தெரிந்துள்ளது.

எனவே தற்போது சுஷாந்த் சிங் தற்கொலைக்குக் காரணம் அவரது தொழில் ஏமாற்றம் அல்லது பாலிவுட்டில் நடக்கும் பாரபட்சமான போக்கு, அதிக போதை மருந்தால் சுஷாந்த் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணையைத் தொடர்கிறது.

கடந்த 5 வருடமாக சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து செலவான ரூ70 கோடியில் ரூ,55 லட்ச மட்டுமே ரியா தொடர்பாக செலவிடப்பட்டுள்ளது.  அவற்றில் பெரும்பாலானவை பயணம், அழகு நிலையம் மற்றும் பரிசுப் பொருட்களுக்கான செலவு எனத் தெரிய வந்துள்ளது.   ரியா இன்னும் சந்தேக வளையத்தில் இருந்தாலும் சுஷாந்த் மரணத்தினால் அவர் பயனடைய வாய்ப்புக்கள் இல்லை என கூறபடுகிறது.

மேலும் சுஷாந்த் தந்தை சொன்னது போல் ரியா தனது கணக்கில் சுஷாந்த் பணத்தில் இருந்து ரூ, 15 கோடியை மாற்றவில்லை எனவும்  இதனால் அவர் தற்கொலை செய்துக் கொள்ள வாய்ப்பில்லை எனவும் சிபிஐ கூறி உள்ளது.  ரியாவுக்கு அவர் செலவு செய்தது மிகவும் குறைவானது எனவும் ஒரு நண்பிக்கு செய்யப்பட்ட செலவுகளாகவே உள்ளதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு அவரது முன்னாள் மேனேஜர் திஷா என்பவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்  அதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என சிபிஐ விசாரணை செய்ததில் இருமரணத்துக்கும் தொடர்புள்ளதாக எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை.

சுஷாந்த் சிங் செய்த செலவுகளில் பெரும்பாலானவை சொத்துக்கள் வாங்குவது,, கார்கள், பைக்குகள் வாங்குவது,  ஊழியர்களின் ஊதியம், விளம்பர நிறுவனங்களின் கட்டணங்கள், வரிகள்  ஆகியவற்றுக்கும் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  எனவே அவர் ரியாவினால் ஏற்பட்ட பணப்பற்றாக்குறை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டிருக்க மாட்டார் என சிபிஐ முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும் சிபிஐ தனது விசாரணையை சுஷாந்த் தனக்குப் பணி கிடைக்காதது, அல்லது தவற விட்டது போன்றவற்றினால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் அல்லது போதை மருந்தை அதிகம் பயன்படுத்தி மனநிலை பாதிக்கப்பட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்னும் கோணத்திலும் தொடர உள்ளனர்..  எனவே விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரலாம்  எனச் சொல்லப்படுகின்றது.

You may have missed