பீஜிங்

லேசியாவில் அமைக்க உள்ள ரெயில் திட்டத்துக்கு அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்ததால் சீனா தனது விலையை மூன்ரில் ஒரு பங்கு குறைத்துள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் மலேசிய நாட்டில்  மாபெரும் ரெயில்வே திட்டம் ஒன்றை அப்போதைய பிரதமர் நஜீப் அறிவித்தார்.  இந்த ரெயில் பாதையை சீன நிறுவனங்கள் அமைக்கவிருந்தன. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நஜீப் தோல்வி அடைந்தார். புதிய பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.  புதிய பிரதமரான மகாதீர் முகமது நிதி நெருக்கடி காரணமாக முந்தைய் அரசின் பல திட்டங்களை ரத்து செய்தார்.

அப்போது இந்த ரெயில் திட்டத்துக்கு ஏராளமான செலவாகும் என்பதால் தற்போது நடத்த முடியாது எனக்  கூறி இந்த திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து மகாதீர் முகமது உத்தரவிட்டார். மேலும் மலேசிய நாடு மிகவும் கடனால் அவதிப்படும் நேரத்தில் இவ்வளவு செலவு வைக்கும் திட்டங்கள் தேவை இல்லை என அறிவித்தார்.

இந்த ரெயில் திட்டத்தை சீனா தனது முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதி வருகிறது. வெளிநாடுகளில் தங்களால் பெரிய திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதை வர்த்தக உலகுக்கு நிரூபிக்க இந்த திட்டத்தை அமைக்க சீனா ஒப்புக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் மலேசியாவின் நிதி பற்றாக்குறையால் தள்ளிப் போடப்பட்டதால் சீனா அதிர்ச்சி அடைந்தது.

ஆகவே  இந்த சீன நிறுவனம் “தற்போது மலேசியாவில் அரசியல் நிலை மாறி உள்ளது. அதனால் பொருளாதாரமும் சீரடைந்து வருகிறது. நாங்கள் தற்போதைய பொருளாதார நிலையைக் கொண்டு கணக்கிட்டதில் முந்தைய விலையில் மூன்றில் ஒரு பங்கு குறைத்துள்ளோம். தற்போது இந்த திட்டத்துக்கு நாங்கள் 11 பில்லியன் டாலர் (ரூ.76.77 கோடி) என விலை அறிவித்துள்ளோம்.” என தெரிவித்துள்ளது.

சீனாவின்  இந்த விலை குறைவால் மலேசிய அரசு இந்த திட்டம் குறித்து மறு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து மலேசிய அதிகாரி ஒருவர் இந்த விலை குறைப்பு என்பது ஒப்புக் கொள்ளும் வகையில் உள்ளதால் அரசு இந்த புதிய விலைக்கு திட்டம் அமைக்க சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கும் என நம்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.