Random image

காங்கிரஸ் ஜனநாயகத்தை காப்பாற்றியதால் தேநீர்காரர் பிரதமர் ஆனார் : மல்லிகர்ஜுன் கார்கே

மும்பை

நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி காப்பாற்றியதால் தான் ஒர் தேநீர் விற்றவர் பிரதமர் ஆனார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் பொருப்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமானவர் மல்லிகார்ஜுன் கார்கே.   இவர் நேற்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் சார்பில் ‘பிராஜக்ட் சக்தி’ என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.   இதன் மூலம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியுடனும் கட்சித்தலைமையுடனும் தகவல்கள் பரிமாற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த திட்டத்தின் மூலம் மக்கள் 9928843010 என்னும் எண்ணுக்கு தங்கள் வாக்காளர் அட்டை எண்ணுடன் குறும் செய்தி அனுப்பி தேவையான தகவல்களை பெறலாம்.

இந்த திட்டத் தொடக்க விழாவில் மல்லிகார்ஜுன் கார்கே, “பிரதமர் மோடி ஒவ்வொரு நிகழ்விலும் தவறாமல் காங்கிரஸ் இந்த 70 வருடங்களில் என்ன செய்தது என மக்களைக் கேட்டு வருகிறார்.    காங்கிரஸ் இந்த 70 வருடமாக ஜனநாயகத்தை காப்பாற்றி வந்தது.  அதனால் தான் ஒரு தேநீர் விற்பவர் இந்நாட்டின் பிரதமர் ஆக முடிந்தது.

அது மட்டுமின்றி இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, மற்றும் சோனியா காந்தி மீது தனி நபர் தாக்குதல்களை பாஜக செய்துவருகிறது.    காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம்.   அதில் அவர்கள் மட்டும் இன்றி அனைத்து தொண்டர்களும் குடும்ப உறுப்பினர்கள்.    எப்போதோ 43 வருடத்துக்கு முன்பு அவசரநிலை பிரகடனம் செய்ததை விமர்சிக்கும் மோடி கடந்த 4 வருடங்களாக அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதை பற்றி ஏன் பேசவில்லை?

விவசாயிகள் தற்கொலை,  விவசாய திட்டங்கள் பின்னடைவு,   விவசாயக் கடன்கள் நிறுத்தம் பற்றியோ அனைத்து வர்த்தகங்களும் பின்னடைந்துள்ளது பற்றியோ அவர் பேசுவதே கிடையாது.    அரசின் செலவைக் குறைப்போம் என சொல்லும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவு செய்வதை குறைக்கவில்லை.   அநேகமாக அடுத்து வரும் காங்கிரஸ் அரசு தான் அதை செய்யும் என நினைக்கிறேன்.” உரையாற்றினார்.