ண்டன்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால் ஐரோப்பிய நாடுகள் விமான பயணங்களுக்குத் தடை விதிக்க உள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு தற்போது 7.71 கோடியை தாண்டி மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 17 லட்சம் ஆகி உள்ளது.   கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  எனவே பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருவோர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வோரால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதையொட்டி பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களுக்குத் தடை விதித்துள்ளது.

இதையடுத்து இத்தாலியும் இதே நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர் அதிக அளவில் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பத் தொடங்கி உள்ளனர்.  இதனால் இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களில் கூட்டம் அதிக அளவில் உள்ளது.