ண்டன்

நேற்று நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் தோல்வியால் தோனி துவண்டதை கண்டு ரசிகர்களும் துக்கம் அடைந்துள்ளனர்.

நேற்று முன் தினம் நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் நியுஜிலாந்தும் மோதின.  மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டதால் நியுஜிலாந்து நேற்று பேட்டிங்கை தொடர்ந்து 239 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அப்போது மூத்த கிரிக்கெட் வீரரான தோனி களம் இறங்கினார்.  அவர் தனது விக்கட்டை காப்பாற்றவும் உடன் விளையாடிய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தனது ஒத்துழைப்பை அளிப்பதிலும் பெரும் பங்கு வகித்தார்.   ஜடேஜாவை அதிகம் விளையாட விட்ட தோனி அவருக்கு மிகவும் ஒத்துழைத்தார்.  பல முறை ஒற்றை ரன்களாக முடிய வேண்டிய நேரத்தில் அதை தனது ஓட்டத்தின் மூலம் இரண்டு அல்லது மூன்று ரன்களாக மாற்றினார்.

தற்போது 38 வயதாகும் தோனி இந்த வயதிலும் இவ்வாறு சளைக்காமல் ஓடியதை ரசிகர்கள் மிகவும் பாராட்டி உள்ளனர்.  ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.  அப்போது அணியின் முழு பொறுப்பும் தோனியின் கைகளில் விழுந்தது.   இருந்தும் சளைக்காமல் விளையாடிய தோனி ரன் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியா இந்த அரையிறுதி சுற்றில் 221 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.   இதை பார்த்துக் கொண்டிருந்த தோனி கண்ணீர் விட்டு அழுதார்.  தோனி அழுவதை கவனித்த பல ரசிகர்கள் கதறி அழுதுள்ளனர்.   இதை ஒரு பாகிஸ்தானியர் உள்ள்ளிட்ட பல ரசிகர்கள் டிவிட்டரில் பதிந்துள்ளனர்.