இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது பேஸ்புக்.. காலை எழுந்ததும் பேஸ்புக் என்று ஆரம்பித்து இரவு கனவிலும் பேஸ்புக்கில் பதிவிடுவோர் பலர் உண்டு.

இந்த நிலையில் நேற்று சில மணி நேரம் பேஸ்புக் செயல்படவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக்வாசிகள் தவித்துப்போய்விட்டனர்.

பேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் சிலருக்கு இன்னும் சற்று நேரத்தில் சரி செய்யப்படும் என்ற தகவல் அனுப்பட்டது.

இதற்கிடையே பேஸ்புக் நிலையை விளக்க ட்விட்டரை நாடினார், அதன் உரிமையாளர் மார்க் சூக்கர்பெர்க், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பேஸ்புக் இணையதளத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எங்கள் பொறியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் எங்களது சேவை தொடரும்” என்று ட்வீட்டினார்.

அதே போல சற்று நேரம் கழித்து பேஸ்புக் சிக்கல்கள் களையப்பட்டு, பேஸ்புக் வழக்கம்போல் செயல்பட்டது. பேஸ்புக்வாசிகள், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.