தீபாவளி சமயத்தில் உற்பத்தி இழக்கும் குஜராத் தொழிற்சாலைகள்

கமதாபாத்
குஜராத் மாநில தொழிற்சாலைகளில் பல வெளி மாநில தொழிலாளர்கள் பணி புரிவதால் தீபாவளி சமயத்தில் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் பல தொழிற்சாலைகள் உள்ளன. குறிப்பாக அகமதாபாத் நகர், மேசானா மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஆட்டோமொபைல், மருந்துத் தொழிற்சாலைகள் என பலவகைப்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடி பேர் தொழிற்சாலைப் பணியாளர்கள் ஆவார்கள்.


இவர்களில் 60% – 70% மேற்பட்டோர் குஜராத் மாநிலத்தை சேராதவர்கள் ஆவார்கள். இவர்கள் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இங்கு வந்து பணிபுரிபவர்கள். வட நாட்டின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு இவர்கள் அனைவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றூ விடுவார்கள்.
இதனால் தீபாவளி சமயத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து தொழிற்சாலை அதிபர் ஒருவர், “குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் வெளி மாநில தொழிலாளர்களை நம்பியே உள்ளன. தீபாவளி நேரத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் நீண்ட விடுமுறையில் சென்று விடுகின்றனர். இதனால் உற்பத்தி இழப்புடன் ஏராளமான பணம் நஷ்டமாகிறது” என தெரிவித்துள்ளார்.